Our Feeds


Sunday, August 10, 2025

Admin

இன்று ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை!


முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேடஅறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து அவர் விசேடஅறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாகக் கருதப்படும் ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் கட்டமைப்பு அவரது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »