ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட ரவீந்திர பத்மபிரிய, இன்று (13) தனது கடமைகளைஉத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியான இவர், இதற்கு முன்னர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார்.
