Our Feeds


Thursday, August 21, 2025

Zameera

டயானா கமகேவை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



இவ் வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.



பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »