மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுன ஏரியில் நேற்று (15) மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோதே இச் சம்பவம் நடந்துள்ளது.
சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மதுரங்குளி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
