என்னங்கடா இது?
இப்படி ராக்கெட் சைஸ் பொய் சொன்னா, இனி உண்மை சொன்னாலும் ஜனம் நம்பாது!
“ராஜபக்சவின் இளைய மகன் Rohitha, அரசாங்கப் பணம் 323 மில்லியன் அமெரிக்க டாலர் கையாண்டு ராக்கெட் மூலம் செய்மதி அனுப்பி விளையாடினார்” என JVP மேடைகளில் போட்டு, போட்டு தாக்கினார்கள். (அந்த உகாண்டா பண கதை மாதிரி..!)
இப்போ, “அப்படி இல்லை, இந்த விண்வெளி திட்டத்துக்கு அரசு பணம் ஒரு ரூபாய் கூட எடுக்க பட வில்லை.” என பிரதமர் ஹரிணி அம்மா உண்மையை உடைத்து சொல்லி விட்டார்.
பின்னர் அமைச்சர் வசந்த சமரசிங்க “அந்த செய்மதி விண்வெளியில் எங்கே என்று தெரியலை, காணோம்” என்று எடுத்து விட்டார்.
இப்போ அந்த கம்பனி SupremeSat, “அப்படி எல்லாம் இல்லை. நம்ம செய்மதி வானில் சரியாக சுற்றுகிறது..” என்று விஞ்ஞான விளக்கமும் கொடுத்து விட்டது.
“என்னங்கடா, இப்படி பொய்க்கு மேல் பொய் சொல்லி மாட்டினா, அப்புறம் உண்மை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க..”
மனோ கனேசன்
