மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி நேற்று (14) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - பெலியத்த ரயில் மார்க்கத்திலேயே இச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று இதுவரை வெளியிடப்படாத நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
