Our Feeds


Wednesday, September 3, 2025

Sri Lanka

குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்!


இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பாதாள உலக நபர்கள் உட்பட பதினேழு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

இலங்கை காவல்துறையின் 159 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் ரி 56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உட்பட 1,612 சட்டவிரோத ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »