ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக வழங்கப்பட்டன.
இதேவேளை நியமிக்கப்பட்டவர்களில் 17 சிறப்பு வகுப்பு நீதித்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் ஒரு சிரேஷ்ட அரச வழக்கறிஞர் ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 (2) ஆவது பிரிவின்படி ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
