எதிர்வரும் 20 ஆண்டுகளுக்காவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமம் என்பதைத் தேசிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அதனையே மக்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விழுதுகள் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறியிருந்தார்.
ஆடம்பரங்களைப் புறந்தள்ளி, ஜனாதிபதி எளிமையான ஆட்சியை முன்னெடுத்துவருவதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசன் போல் ஜனாதிபதிகள் செயற்பட்டாலும் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி மிக எளிமையாக சாதாரண குடிமகன் போல் ஜனாதிபதி ஆட்சியை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செயல்கள் இலங்கையைக் கடந்து உலகமே வியந்து பார்க்கும் வகையில் உள்ளதாக சுந்தரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டினார்.
