செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை (02) அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகவும் மாறாமல் உள்ளது என நிறுவனம் உறுதிப்படுத்தியது.
நடைமுறையில் உள்ள எரிவாயு விலை நிர்ணய பொறிமுறையின் கீழ் நிறுவனத்தின் வழக்கமான மாதாந்திர விலை மதிப்பாய்வைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
