Our Feeds


Tuesday, September 16, 2025

Zameera

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது!


 கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜை ட்ரோன் கமரா மற்றும் அதனை பறக்க விட பயன்படுத்திய பொருட்களுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சீன பிரஜை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தியவடன நிலமேவின் வீட்டை அண்டிய பகுதியில் ட்ரோன் கமராவை பறக்க விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »