Our Feeds


Thursday, September 18, 2025

Zameera

ஹெரோயின் போதைப்பொருளுடன் காவி உடை அணிந்தவர் உட்பட மூவர் கைது!


 ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த காவி உடை அணிந்த  நபர் உட்பட மூன்று பேர் மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று புதன்கிழமை  (16)  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் அலவ்வ பொலிஸ் பிரிவில் உள்ள விகாரையொன்றில் பணிபுரிந்த 38 வயதுடைய  காவி உடை அணிந்த  நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து  10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, கைது செய்யப்பட்ட 29 மற்றும் 31 வயதுடைய மற்ற சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து  17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த நேவி தினேஷின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று புதன்கிழமை  (17) பொல்ஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, சந்தெகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த  பொலிஸாருக்கு  அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »