Our Feeds


Monday, September 15, 2025

Zameera

செம்மணி முதலான மனிதப் புதைகுழிகள், இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்


 செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (15) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கையெழுத்துப் போராட்டம் மாற்றத்துக்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் நடத்தப்பட்டது.

இதில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »