Our Feeds


Wednesday, September 10, 2025

Zameera

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலங்கை கவலை தெரிவிப்பு!

 


கத்தாரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

குறித்து இலங்கை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.


இது குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில், கத்தார் மீதான தாக்குதல் நிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும் மற்றும் பிராந்திய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.



உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய இராஜதந்திர உரையாடலில் நிதானம் மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »