Our Feeds


Thursday, September 11, 2025

SHAHNI RAMEES

அரகல - கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் முன்னாள் MP க்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படவிருந்த வீடுகளுக்கான சலுகை விலை ரத்து.


அரகல - கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் முன்னாள்

MP க்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படவிருந்த வீடுகளுக்கான சலுகை விலை ரத்து.


இலங்கையில் ஏற்பட்ட “அரகலய” புரட்சியின் போது எரியூட்டப்பட்ட எம்.பி க்களின் வீடுகளுக்கு பதிலாக அப்போதைய அரசு “வியத்புர” வீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான வீடுகளை சலுகை விலையில் வழங்க முடிவெடுத்திருந்தது.


குறித்த வீட்டுத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக 29 (முன்னாள்) பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது வீட்டின் பெறுமதியில் 25% செலுத்தியிருந்தனர். 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகளை சலுகை விலையில் வழங்க எடுத்த தீர்மானித்தினால் அரசுக்கு 90 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக அரசாங்க ஊடக பேச்சாளர் நலிந்த ஜெயதிச்ச தெரிவித்துள்ளார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை சலுகை விலையில் கொடுப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த முடிவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்வதாகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் பொதுமக்களுக்கு விற்கப்படும் அதே விலையில் - சலுகைகள் இல்லாமல் குறித்த வீடுகளை விலைக்கு வாங்க முடியும் எனவும் அரசு முடிவெடுத்துள்ளது.


வீடுகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வீட்டின் விலையில் 25% பணத்தை செலுத்திய முன்னாள் எம்பிக்களின் பெயர் பட்டியலும் வெளியாகியுள்ளது.


குறித்த பட்டியலில் முன்னாள் MP க்களான முஷாரப் முதுநபின், அலி சப்ரி ரஹீம் மற்றும் முசம்மில் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.


இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முத்துநாபீனின் வீடு “அரகலய” கலவரத்தின் போது எரியுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »