பாலஸ்தீன அப்பாவிகளுக்காக #மூதூரில் மொத்தமாக
திரண்ட பொதுமக்கள். - #Free_Pa*lastineபாலஸ்தீன விடுதலை வேண்டியும், உடனடி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியும் இன்று மூதூரில் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஜும்மா தொழுகையை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து கலந்துகொண்ட ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் பங்கு கொண்டார்கள் - AlhamdhuLillah
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் ரஸ்மின் MISc அவர்களும் கொழும்பிலிருந்து வருகை தந்து பங்கெடுத்ததுடன், ஆர்ப்பட்டத்தின் கண்டன உரையையும் ஆற்றினார்.
பாலஸ்தீனம் தொடர்பில் ஐ.நா கொண்டுவரும் தீர்மானங்கள் அனைத்திற்கும் கடந்த கால இலங்கை அரசுகள் ஆதரவளித்தது போல் தற்போதைய அரசும் எதிர்வரும் ஐ.நா அமர்வுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது .



.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)



