கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊகடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“மேற்கு மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். தெற்கு மாகாணம் இன்னும் மோசமாக இருக்கலாம் என நான் நம்புகிறேன். அது மட்டுமின்றி தெற்கு மாகாணம் பாதாள உலக நடவடிக்கைகளிலும் முதலிடத்தில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
