இத்தகைய நிலையில், மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாக உள்ள பாடசாலைகளைத் தற்காலிகமாக மூட அரசாங்கம் தயாராகி வருவதாகவும், அந்த பாடசாலைகளில் ஒருவருக்கான செலவு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கல்வி அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் “பாடசாலை கட்டமைப்புக்கான சுற்றறிக்கை மற்றும் வழிமுறைகள்” என்ற பெயரில் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதில், எந்த ஒரு பாடசாலையையும் நடத்தக் குறைந்தபட்சமாக 50 மாணவர்கள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையின் படி, ஒரு பாடசாலையின் மொத்த மாணவர் எண்ணிக்கை 50க்கு குறைவாக இருந்தால், அதிகபட்சம் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள மற்றொரு பாடசாலையுடன் இணைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கருத்தைத் தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரே மாதிரியான பொதுத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், அதனைப் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைத்து முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
