2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3,253 பேர் வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் (ஒக்டோபர் 29) மாத்திரம் 72 பேர் வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
4 ஆண்டுகள் வரை தென் கொரியாவில் வேலை செய்வதற்கு இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
