ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 5,700,000 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப் . யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் உடல் பரிசோதனை மற்றும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 4,082 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 120,000 பேர் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பிடியாணைகளின் கீழ் 35,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்தோடு, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 66 T-56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
