அமெரிக்க அதிபர் வெளியிட்ட சமாதான திட்டத்தை பகுதியளவு ஒப்புக்கொள்வதாக பாலஸ்தீன விடுதலை அமைப்பினர் அறிவித்த நிலையில் “பாலஸ்தீன விடுதலை அமைப்பினர் நீண்ட சமாதானத்திற்கு தயார் என அறிவித்துள்ளனர்.” எனவே இஸ்ரேல் உடனே யுத்தத்தை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தாம் யுத்தத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் காஸா அப்பாவிகள் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அல்-ஜஸீராவின் காஸா பத்திரிக்கையாளர்கள் வெளியிடும் தகவல்களை அல்-ஜஸீரா நேரடி ஒளிபரப்பு செய்து வரும் நிலையில், காஸா நகரத்தில் மாத்திரம் இன்று காலை முதல் 16 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அல்-நாஸர் மருத்துவமனை வளாகத்தில் 5 பேரும், அல்-ஷிபா மருத்துவமனை வளாகப் பகுதிகளில் 6 அப்பாவிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரங்களுக்குள்ளாக 66 அப்பாவிகள் மொத்தமாக இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா நகரம் மற்றும் பல இடங்களிலிருந்து மக்களை உடனே வெளியேறுமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வான்வழியாக துண்டுப் பிரசுரங்களை வீசி வருகின்றது.
