Our Feeds


Monday, October 27, 2025

Sri Lanka

கமரூன் நாட்டின் ஜனாதிபதியாக 92 வயது நபர்!



மத்திய ஆபிரிக்க நாடான கமெரூனில் 92 வயதுடைய தற்போதைய ஜனாதிபதி 8 வது தடவையாகவும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் போல் பியா (Paul Biya) என்பவரே இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


இவர் 1982 ஆம் ஆண்டு முதல் நாட்டை வழிநடத்தி வருகிறார். ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் அரசியலமைப்புச் சபையினால் இன்று (27) அறிவிக்கப்பட்டது. 


அதில் 92 வயதான தற்போதைய ஜனாதிபதி போல் பியா 53.66 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 


எதிர்க்கட்சி வேட்பாளரான இஸ்ஸா ச்சிரோமா (Issa Tchiroma) 35.19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 


70-களின் பிற்பகுதியில் உள்ள முன்னாள் அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான ச்சிரோமா, தனது கட்சியால் தொகுக்கப்பட்ட முடிவுகளை மேற்கோள் காட்டி, முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே தாம் வெற்றி பெற்றதாகக் கூறியிருந்தார். ஆனால், பியா இந்தக் கோரிக்கையை நிராகரித்தார். 


இதேவேளை முடிவுகளில் உண்மைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கமரூன் தலைநகரில் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் சுமார் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »