உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த எச்சரிக்கையை புறக்கணித்து அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட மனு தாக்கல் செய்திருந்தனர்.
அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் மனு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
