ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே
டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஜப்பான் முன்னாள் பிரதமரின் மறைவையடுத்து புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.
இதில் அந்நாட்டு கன்சர்வேடிவ் கட்சியின் Sanae Takaichi புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
67 வயதான அவர் ஜப்பானின் ‘Iron Lady’ என அறியப்படுகின்றார்.
பிரித்தானிய முன்னாள் பிரதமர் மார்க்ரட் தச்சரின் அரசியல் ரசிகையான இவர் கருதப்படுகின்றார்.
ஜப்பானிய பிரதமராவதற்கு கடந்த இரு தடவைகள் முயன்ற போதிலும் அது தோல்வியடைந்த நிலையில் அவரது மூன்றாவது முயற்சி வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது.
எனினும் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையில் Sanae Takaichi பிரதமராக பதவியேற்றுள்ளார்.
