Our Feeds


Wednesday, October 15, 2025

Zameera

மடகஸ்காரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்


 தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் ஜென் இசட் தலைமுறையினர் தங்களது போராட்டத்தை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தினர்.

இதில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இளைஞர்களின் போராட்டத்துக்கு இராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் இராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பி ஓடி உள்ளார். இராணுவ கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறும்போது,

என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என்றார்.

அவர் தனது உரையில், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக சொல்ல வில்லை.

எனினும் நாட்டை விட்டு அவர் வௌியேறியுள்ளதால் அவரை பதவியில் விலக்குவதற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை அடுத்து மடகஸ்காரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட இராணுவ கேர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, விரைவில் மக்கள் அரசாங்கத்தை அமைக்க பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »