Our Feeds


Friday, October 31, 2025

Sri Lanka

பாத்திமா சபியாவிற்கு பதவி உயர்வு!


தெற்காசிய தடகள சம்பியன்ஷிப்பில் திறமையை வெளிப்படுத்திய பாத்திமா சாஃபியா யாமிக் , கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார்.


இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசியத் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை சபியா யாமிக் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


அத்துடன், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனது போட்டி தூரத்தை 23.58 வினாடிகளில் நிறைவு செய்து புதிய சாதனையும் அவர் படைத்தார். 


இதன்படி 27 ஆண்டுகளுக்கு முன்பு, 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் பி.டி. உஷா படைத்த சாதனையை சபியா யாமிக் முறியடித்துள்ளார்.


அத்துடன் சபியா யாமிக் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


அதன்படி, இந்த சம்பியன்ஷிப்பில் போட்டியில் சபியா யாமிக் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.


குறித்த சாதனைகளை அடுத்து இராணுவத்தில் உள்ள அவர் கோப்ரலாக (Corporal) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »