Our Feeds


Tuesday, October 7, 2025

Sri Lanka

மஹிந்தவை மீண்டும் சீண்டிய பொன்சேகா!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். 

மாத்தறையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். 

"இந்த நாட்டில் ஒரு ஊழல் வலையமைப்பு உள்ளது. அந்த ஊழல் வலையமைப்பு சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டின் ராஜபக்ஷக்களால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷக்களின் சலுகைகளை ரத்து செய்து அவரது உத்தியோகப்பூர்வ வீட்டை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் தொலைக்காட்சிக்கு கூறுகையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் அலரி மாளிகையிலிருந்தும் எடுக்கப்பட்ட தளபாடங்கள் மற்றும் பொருட்கள் மஹிந்த ராஜபக்‌ஷ தங்கியிருந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருப்பதாக தெரிவித்தார். 

அதனை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் தமது தனிப்பட்ட சொத்துக்களை அங்கிருந்து எடுத்துச் செல்வதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். 

மஹிந்த தரப்பினர் தமது சொந்த பணத்தை செலவிட்டு அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு பொருளை கொள்வனவு செய்திருப்பார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா? 

நான் அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருந்திருந்தால் அலரி மாளிகையில் உள்ள பெறுமதியான பொருட்களை எடுத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன். 24 மணி நேரத்திற்குள் அவரை அதில் கைது செய்யவும் முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »