கண்டி - ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளவி தாக்குதலுக்குள்ளான குறித்த சுற்றுலா பயணிகள் 119 என்ற அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாதுகாப்புப்பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐவர் ஹந்தானை மலைக்கு சென்ற போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் பணி மூட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
