மலையக மக்களுக்கு நீங்கள் வீடுகள் வழங்கவில்லை. சான்றிதழ்களை மட்டுமே வழங்கி எமது மக்களை ஏமாற்றியுள்ளீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அமைச்சாராக இருந்த காலத்தில் 1300 க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிமுடித்து ஒப்படைத்துள்ளேன். வீதிகளும் கட்டி முடித்து ஒப்படைத்துள்ளேன். நான் கேட்ட கேள்வி எதிர்கட்சி உறுப்பினராக நீங்கள் எத்தனை வீடுகள் கட்டி இருக்கிறீர்களென்று? திரும்ப திரும்ப ஒன்றை தான் கேட்கிறேன் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார்.
