Our Feeds


Saturday, October 11, 2025

Zameera

வடக்கு, கிழக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் - சாணக்கியன் எம்.பி


 நேற்று 10.10.2025 இடம்பெற்ற பாராளுமன்ற அதிவேக நெடும்சாலைகள் தொடர்பான விவாதத்தின் போது வடக்கு மற்றும் கிழக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இது மிக முக்கியமான ஒரு முன்மொழிவு.

உண்மையிலே இந்த இரத்தினபுரி பிரதேசத்திற்கு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க உள்ளதினை நாங்கள் வரவேற்கின்றோம். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

ஆனால் கௌரவ பிரதி சபாநாயகர் உங்களுக்குத் தெரியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தளவில் பிரதான போக்குவரத்து அபிவிருத்தி இன்மை என்பது அந்த அந்த பிரதேசங்கள் அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கான பிரதானமான காரணம் அவ் போக்குவரத்திலே இருக்கிற சிக்கல்கள் தான்.

எட்டு மணித்தியாலம் கொழும்பில் இருந்து வருவதற்கும் செல்வதற்கும் எடுக்கின்றது.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததினுடைய ஒரு முன்மொழிவு இருந்தது.

நான் நினைக்கின்றேன் மொனராகல பிரதேசத்தின் ஊடாக மட்டக்களப்புக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலையை கொண்டு வருவதற்கும், அதே நேரத்தில் தம்புள்ளை ஊடாக வடக்கை நோக்கி ஒரு அதிவேக நெடுஞ்சாலை கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் அதனுடைய கவனத்தை எடுக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் முக்கியமாக சொல்ல விரும்புகின்றேன்.

சீனாவினை வட கிழக்கு மக்கள் எதிர்ப்பதற்கான காரணம் சீனாவானது தமிழ் மக்களுக்கு எதிரான கொள்கையினை மிக நீண்ட காலமாக கொண்டிருப்பதாலும் சர்வதேச மட்டங்களிலும் ஐ.நா அமர்வுகளிலும் எம் மக்கள் மீதான எதிர்ப்பை நீண்ட காலம் வெளிப்படையாக காட்டி வருவதாலாகும்.

அதன் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனா மீது வெறுப்புடன் உள்ளார்கள்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் துறைமுகங்கள் அன்றாட பாவனைக்கு ஏற்றால் போல் புனரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டு இதற்கான துரித போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »