பாலஸ்தீனத்தில் யுத்தத்தை நிறுத்துவது தொடர்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட 20 அம்ச திட்டத்தின் ஒரு பகுதியை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அமைதிக்கு தயார் எனவும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு அறிவித்துள்ளது.
யுத்த நிறுத்தம் தொடர்பில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள திட்டத்தை பகுதியளவில் ஒப்புக் கொள்வதாகவும் மேலதிக பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது ஹமாஸ்.
பாலஸ்தீனத்தின் அதிகாரத்தை வெளிநாடுகளிடம் ஒப்படைக்க முடியாது எனவும் பாலஸ்தீன மக்களை கொண்ட அரசிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளதாகவும் ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மூஸா அபூ மர்சூக் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை ஒப்படைத்தல் முறைமை தொடர்பில் விரிவாக பேச வேண்டும் எனவும், ஆயுதங்களை பாலஸ்தீனர்களை கொண்டு அமைக்கப்படும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு எப்போதும் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அறிவிப்பை தொடர்ந்து, காஸாவில் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டளையிட்டுள்ளதாக தனது “சோஷியல் ட்ரூத்” சமூக வலைப்பக்கத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நன்றி: அல்-ஜஸீரா அரபி
