Our Feeds


Thursday, October 9, 2025

Zameera

வரலாற்று பாடத்தை கட்டாய பாடமாக ஆக்குங்கள்! - சஜித் பிரேமதாச


 நமது நாட்டு மக்கள் பொய்களால் எப்படி ஏமாற்றப்பட்டு உதவியற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதைப் பார்க்கும்போது, ​​பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும், 40 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோவிட் - 19 தொற்றுநோய் மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக உதவியற்ற நிலையில் இருக்கும் சமயத்தில், அவர்களின் 260,000 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போதைய அரசாங்கத்தின் வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். பராட்டே சட்டம் இரத்துச் செய்யப்படும். வட்டி விகிதங்கள் குறைக்கப்படும். வியாபார நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல தக்க மூலதனம் வழங்கப்படும். கடன் நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கி இருந்தாலும், இன்று அது எதுவும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று (08) நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கம் மிகவும் நியாயமற்ற முறையின் கீழ் நமது நாட்டின் தொழில்முனைவோரை பழிவாங்கி வருகிறது. திரு. கோசல விதானாராச்சி 10 ஆண்டுகளுக்கு 38 மில்லியன் கடனைப் பெற்றிருந்தாலும், இன்றுவரை, அவர் 52.4 மில்லியனை செலுத்தியுள்ளார். மொத்தக் கடனான 38 மில்லியனை அடைக்க அவர் மேலும் 80 மில்லியனைக் கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மொத்த தொகை 137 மில்லியன் ஆகும். இந்தத் தரவுகள் அனைத்தையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த அநீதிகள் அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தாலயே முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் இன்று வாக்குறுதியளித்ததைச் செய்யாதிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

இந்த அரசாங்கத்தால் கூட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை பாதுகாக்க முடியாதுபோயுள்ளது, 

முந்தைய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இரத்து செய்த போதிலும், கடனில் மூழ்கியிருந்த நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை இலக்காகக் கொண்டு, பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தது. ஆனால் கடனை மறுசீரமைக்கவில்லை. கோயபல்ஸ் கொள்கையை யார் பின்பற்றுகிறார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரிகிறது. 

38 மில்லியன் கடன் பெற்ற தொழிலதிபர் ஒருவர் இன்று 137 மில்லியன் திருப்பிச் செலுத்த வேண்டி காணப்படுகின்றன. 

போதைப்பொருள் போலவே, இணையவழி கடன் மாபியாவையும் ஒழிக்க வேண்டும், 

நாட்டில் இணையவழி கடன் மாபியா நடந்து வருகிறது. இது குறித்த விடயங்களை எதிர்க்கட்சி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தக் கடன் மாபியா முன்னெடுப்புகள் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாது, தமது தனிப்பட்ட செல்வத்திலிருந்து அதிகப்படியான வட்டிக்கு கடன் வழங்கி, அதன் மூலம் இந்தக் கடன்களை நியாயமற்ற முறையில் அறவிட்டு வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பது பாரிய பிரச்சினையாகும். சாதாரண உழைக்கும் மக்களின் பணத்தை இவர்கள் சுரண்டுகின்றனர். 

இன்று லீசிங் நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களை மீறி, வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி வருகின்றன. 

வாகனமொன்றை கொள்வனவு செய்து, அதற்கு லீசிங் எடுத்து, லீசிங் காலாவதியான பிறகு அதை மீண்டும் கையகப்படுத்துவது சட்டத்திற்குள் முன்னெடுக்கப்பட வேண்டும். நியாயமான நடைமுறையாக இது அமைந்து காணப்பட வேண்டும் என்றாலும், 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தை மீறி, லீசிங் நிறுவனங்கள், பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து, இந்தச் சட்டத்தை மீறி, பொலிஸ் மா அதிபர் வழங்கிய பரிந்துரைகளையும் கிடப்பில் போட்டு, குண்டர்களையும் சண்டியர்களையும் பயன்படுத்தி வாகனங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றி வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் தீர்வுகள் இல்லை. 

பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாக செயல்பட இடமளியுங்கள், 

பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை பாதுகாக்க நாம் அழைப்பு விடுக்கிறோம். அரசியல் தலையீடுகளை இதில் பிரயோகிக்கக் கூடாது. சிறந்த ஆட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்து, அதிகாரங்களுக்கிடையேயான தடைகள் மற்றும் சமன்பாடுகள் மூலம் வலுவான பொலிஸ் சேவையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அரசாங்கம் இதற்கு தடையாக இருந்து வருகிறது. எனவே, பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார். 

வரலாற்று பாடத்தை கட்டாய பாடமாக ஆக்குங்கள், 

கல்வியை நவீனமாக்க வேண்டும், அபிவிருத்தியடைந்த சமூகத்தில் சிறார்கள் தலைமுறையை அதற்கேற்ப உருவாக்குவது போல, கடந்த காலத்தை மறந்து விடவும் முடியாது. அரச காலத்தில் நமது நாட்டின் பெருமைகளை குழந்தைகள் அறிய வேண்டும். ஏகாதிபத்திய சக்திகள் இந்த நாட்டை ஆதிக்கத்துக்குட்படுத்திய போது, ​​அந்த ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க இந்த நாட்டின் மன்னர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் வரலாற்றை அழித்து விட முடியாது. திறமை, ஆற்றல் மற்றும் தொழில்முறை திறன் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்குவதில் நமது அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் வரலாறு கட்டாய பாடமாக அமைந்து காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »