துருக்கி Air Actஇற்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 சரக்கு விமானமானது, ஹொங்கொங் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையிலிருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது.
இதன்போது விமானம் மோதிய வாகனத்திலிருந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக விமானத்திலிருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிப்படைந்துள்ள ஓடுபாதையை மூடுவதற்கு விமான நிலைய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
