
பாலஸ்தீன சுதந்திர விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் மற்றும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு இடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து தம்வசம் இருந்த கடைசி 20 கைதிகளையும் இன்று மொத்தமாக விடுதலை செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது ஹமாஸ்.
முதல் கட்டமாக 07 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு சற்று முன் மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒப்பந்தப் பிரகாரம் காஸாவை சேர்ந்த 2000ம் அப்பாவி கைதிகளை இஸ்ரேல் சற்று முன் விடுதலை செய்ய ஆரம்பித்துள்ளது.