ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று (25) இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதி, வெலிகெபொல வட்டாரத்தில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தற்போது சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர்.
சமூகத்தில் கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளன.
பிரதேச சபைத் தவிசாளரால் பொது மக்கள் தினத்தை கொண்டு நடத்தவோ, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கவோ முடியாத நிலை எழுந்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன. அரசாங்கத்தின் இயலாமையினால் இந்நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது போயுள்ளன.
காட்டுச் சட்டம் கோலோச்சி, பாதாள உலகம் ஆளும் சூழலை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் எப்போதும் மக்களுக்கு பொய்யான எதிர்பார்ப்புகளையே வழங்கி வந்தன.
இருக்கும் மக்கள் நம்பிக்கையையும் அளித்து வருகிறது. இன்று பொய்களும் ஏமாற்று வேலைகளும் மட்டுமே நடந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நமது நாட்டில் விவசாயத்தை முன்னேற்றம் காணச் செய்யலாம் என நான் கூறும் போதும் அதற்கும் கிண்டல் செய்து சேறு பூசுகின்றனர்.
நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையில் நெதர்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட நிலப்பரப்பில் அதிக அறுவடைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
