Our Feeds


Sunday, October 26, 2025

Sri Lanka

தாதியர்களின் சீருடையை மத கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றினால் நடவடிக்கை எடுப்போம் - முத்தேட்டுவ ஆனந்த தேரர்!


இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிராக எங்களது பொது அரச தாதியர்கள் ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தும்.


அதற்கு எதிராக நாங்கள் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையில் இறங்கும் என பொதுச் சேவை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முத்தெட்டுவ ஆனந்த தேரர் இன்று 26 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் வழமையாக இருந்து வரும் தாதியர்கள் சீருடையை அவரவர் மதம் கலாச்சாரத்திற்கேற்ப அணியலாம் என ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கவனித்தேன்.

ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சர் திறம்பட எடுத்துச் செல்லும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச இதற்கு உடன்படமாட்டார் என நினைக்கின்றேன்.

முன்னாள் அமைச்சர் காலம் சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் கலாச்சார ஆடை அணிவதற்கு ஏற்ப தாதியர்களின் சீறுடையை மாற்றும் படி அப்போது இருந்த சுகாதார அமைச்சர் ரேணுகா கேரத்திடம் கோரிக்கை விடுத்தார் அப்போது சுகாதார அமைச்சர் இவ்வாறு செய்ய முடியாது என்று சொல்லியிருந்தார்.

ஆகவே தான் சுகாதார அமைச்சர் இந்த தாதியர்கள் அணியும் சீருடையை ஒர் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகின்றோம் இவ்வாறு அவர் நடவடிக்கை எடுப்பின் எங்கள் ஊழியர்கள் சங்கம் இதற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

அவ்வாறு முஸ்லிம் தாதியர்கள் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப உடை அணிய வேண்டும் என்றால் அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகிச் செல்ல முடியும் எனவும் முத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மேற்படி விடயம் கடந்த 24ஆம் திகதி மாதாந்தம் முஸ்லிம்களது பிரச்சினைகள்,மதம், கல்வி கலாச்சார விஷயம் கலந்துரையாடுவதற்கு ஒவ்வொரு மாதமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வெளிநாட்டு அமைச்சர் தலைமையில் வெளிநாட்டு அமைச்சின் கூடி கலந்துரையாடுவார்கள்.

அவ்வப்போது முஸ்லிம்கள் சம்பந்தமான அவ்வப்போது எழும் பிரச்சினைகள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அமைச்சல் விஜித் ஹேரத்திடம் முன் வைத்தனர் இதில் மூதூர் வைத்தியசாலை ,தாதியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், மற்றும் திறந்த பல்கலைக்கழக தாதிய பயிற்சி நெறிகள் பயிலும் முஸ்லிம் பெண்கள் சீருடையில் அணிவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது.

அச் சமயம் அமைச்சர் முஸ்லிம் பெண்கள் தத்தமது கலாச்சாரத்தில் கேற்ப உடை அணிந்து கொள்ள முடியும். அதில் தாதியர்கள் சீருடையில் அவர்களது கலாச்சாரத்திற்கு அணிய எவ்வித தடையும் விதிக்கவில்லை எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »