வெல்லவாய, தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சர்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவர் வெல்லவாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லவாய, ரஜமாவத்தையைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் சர்ஜென்ட் ஆவார்.
சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
