ஆயுர்வேத பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஏ.எம்.ஜீ.என் தீப்தி சுமனசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளராக பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாவார்.
ஆயுர்வேத பணிப்பாளர் நாயகம் பதவிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
