உலக சந்தையின் வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றுவதே இதற்குக் காரணமாகும்.
பங்குச் சந்தைகளில் தொடர்ந்து காணப்படும் நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், வட்டிவீதங்களின் மாற்றங்கள் உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் தங்கம் மீதான விருப்பமும் அதனுடன் கூடிய விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைக்கமைய தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
