ஆந்திராவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதன்படி பட்டாசுகளை தவறாக கையாண்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
