போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்......
"நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது. அது பொலிஸின் திறமையின்மை அல்ல. நான் ஒன்றைச் சொல்கிறேன். அவர்களின் முதல் அதிகாரம், அரசியல் அதிகாரம், இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். சிலர் பயப்படுகிறார்கள். இன்றும் சில குற்றங்கள் சிறைச்சாலைகளில் இருந்தே இயக்கப்படுகின்றன மேலும் அவர்கள் அதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த வெலிகம சம்பவம். சிலர் பயத்தில் இருக்கிறார்கள். சிலர் பணத்திற்காக சிக்கியுள்ளனர். இன்று இலங்கை பொலிஸ் அந்த ஆபத்தை ஏற்று, இந்த நடவடிக்கையைத் தொடங்க கடமைப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவாளியின் எதிரியாக மாறுகிறது. மேலும், எதிர்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகப் போகும் சில பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்."
போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை என்றும், அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி, இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த குரல் மற்றும் பாதுகாவலன் அதுவே என்றும் கூறினார்.
"நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். இறுதியாக, போதைக்கு அடிமையானவர்களுக்கும், விற்பவர்களுக்கும், உடனடியாக விலகுங்கள். அதற்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த மாயாஜால சூறாவளியை அழிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் விடுவிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்."
