மாணவியொருவர் பாடசாலையின் வகுப்பறையில்
சக மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்த புகைப்படத்தை, நிர்வாணமாக எடிட் செய்து சமூக ஊடகங்களில் புகைப்படமாக பரப்பிய கொத்தனார் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மெதியாகன பகுதியைச் சேர்ந்த 19 வயது செங்கல் தொழிலாளி ஆவார்.
சந்தேக நபர் இந்த புகைப்படத்தை சமூக ஊடக குழுவொன்றில் வெளியிட்டுள்ளார்.
சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
.jpg)