Our Feeds


Monday, October 27, 2025

Zameera

புதையல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது


 புதையல் தேடும் நோக்கத்திற்காக அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலன்னறுவை குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (26) அதிகாலை பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும பொலிஸ் பிரிவின் நுவரகேயாய பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 

இதன்போது புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட மூவருடன், அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர். 

சந்தேக நபர்கள் 20-43 வயதான புத்தளம் மற்றும் அத்தனகடவல பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியபெதும பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், நேற்று பிற்பகல், கப்புகொல்லேவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹொரொவ்பொத்தானை, கப்புகொல்லேவ பொலிஸ் பிரிவின் துட்டுவெவ பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர், அகழ்வு பொருட்களுடன் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் துட்டுவெவ, கப்புகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கப்புகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »