Our Feeds


Tuesday, October 7, 2025

Sri Lanka

முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் உதயமானது!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்தீனின் தலைமையில். கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுஹைர் அத்தாசின் வழிநடத்தலில் இளைஞர் காங்கிரஸ் புதிய பரிமாணம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு பேச்சாளராக புத்தளம் மாவட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.  நியாஸ்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல், இளைஞர்களை ஆபத்தான போதைப் பொருள்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன  வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு திடசங்கட்பம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ஊடகப்பிரிவு -

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »