பாலஸ்தீனத்தின் காஸா மீது யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் அநியாயத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நேரடி உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அல்-ஷிபா மருத்துவமனை உள்ளிட்ட காஸாவின் பல பகுதிகள் மீதும் தரைவழி, வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்துகிறது. என அங்கிருக்கும் அல்-ஜஸீராவின் செய்தியாளர்கள் விபரிக்கிறார்கள்.
இதுவரை 2 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
