தென் மாகாணத்தில் உள்ளூர் அபராதங்களை GovPay மூலம் இன்று திங்கட்கிழமை (20) முதல் செலுத்த முடியும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த வசதி அடுத்த மாதம் வடக்கு மாகாணத்திலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த வருட இறுதிக்குள் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
