Our Feeds


Wednesday, November 26, 2025

Zameera

போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே”வுக்கு சொந்தமான 5 மீன்பிடி படகுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்




 பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து மீன்பிடி இழுவைப் படகுகளை திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 

சுமார் 200 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய இந்த இழுவைப் படகுகளை குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்படகுகள் திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »