அடுத்த ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடனான சந்திப்பின்போது வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற சந்திப்பில், வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நகர அழகாக்கல், சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
