முதலீட்டு பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொழில் முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை தான் தோன்றித்தனமாக பொது உடமையாக்குவதைத் தடுத்தல் பயனுள்ள மாற்றுவழிப் பிணக்குத் தீர்க்கும் பொறிமுறையாக முதலீட்டுப் பாதுகாப்பு சபையை ஸ்தாபித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான கொள்கை உறுதிப்பாடு மற்றும் ஊகிக்கும் இயலுமையை உறுதிப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல் 2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான கருத்தாக்கப் பத்திரத்தைத் தயாரிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
