அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என
அரசாங்கத்திடம் கூறுகின்றோம். கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவற்றில் 50% கூட செய்யப்படவில்லை. அப்படியிருக்க ஜனாதிபதி 4 1/2 மணி நேரம் பேசுகிறார். யார் 1,700 கெப் வாகனங்களைக் கேட்டது? எந்த நிறுவனம் கெப் வாகனங்களை கோரியுள்ளது.அரசாங்கம் சிலரை மகிழ்விக்க வேண்டியிருக்கலாம். அரசாங்கம் பொய் சொல்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 'ஐஸ்' சம்பந்தமாக என்னைத்தான் கைது செய்ய முயன்றார்கள். அது பெலவத்தையிலேயே சரிந்து விழுந்துள்ளது. அனைவரும் 21ஆம் திகதி நுகேகொடையில் கூடுவார்கள் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். -
